Wednesday, 25 February 2015

post


அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் புராணக்கதை..


இந்த நாகமலை உருவானதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது..முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுகும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. இதன்படி ஆதிசேஷன் தன் படங்களால் மேருமலையை அழுத்தி பிடித்துக்கொள்ளவேண்டும். அதை வாயுபகவான் தன் பலத்தால் விடுவிக்க வேண்டும் என்பதே அந்த பந்தயம். ஆனால் வாயுபகவானால் ஆதிசேஷன் பிடியை தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுபகவான் தன் சக்தியை அடக்கிக்கொண்டார். 

இதனால் அணைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டன. இந்த பேரழிவை கண்ட தேவர்களும், முனிவர்களும் ஆதிசேஷனிடம் பிடியை தளர்த்துமாறு வேண்டினர் . அவரும் தன் பிடியை தளர்த்த இதை பயன்படுத்திக்கொண்ட வாயுபகவான் தன் முழு சக்தியையும் பயன்படுத்தி வேகமாக மோதி மலையின் சிகரத்துடன் ஆதிசேஷன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாக விழ செய்தார். அவ்வாறு விழுந்த பாகங்களில் ஒன்றுதான் இந்த நாகமலை அதாவது இந்த திருச்செங்கோடு என்று அந்த புராணக்கதை கூறுகிறது.

No comments:

Post a Comment