Thursday, 19 February 2015

என் பார்வை

காலம் பொன் போன்றது

   ”காற்றுள்ள போதே துாற்றிக் கொள்” என்கிறது பழமொழி ஒன்று. எந்த ஒரு செயலையும் காலத்தே செய்ய வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்டதே அது. காலத்தின் அருமையை மக்கள் உணர வேண்டும். முதுமையில் தளர்ச்சி. தள்ளாமை அனைத்தும் மனிதர்க்கு வந்துவிடும். அதனால் இளமைப்பருவத்தில் காலத்தை வீணாக்குதல் கூடாது.
       இளமைப் பருவம் கல்விக்குரியது. அப்பருவத்தை யாரும் வீண் செய்தல் கூடாது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. காலத்தை தவறவட்ட பின் வருந்தக்கூடாது. ” இளமையில் கல், பருவத்தே பயிர் செய்” என்கின்ற பழமொழியை மாணவர்கள் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். மழை காலத்தில் விதைக்க வேண்டும் அப்போதுதான் பயிர் நன்றாக வளர்ந்து தக்க பலனை தரும். விதைக்க வேண்டிய காலத்தில் அறுவடைக்குச சென்றால் எதுவும் கிடைக்காது அல்லவா?. மாணவன் தன் பெற்றோர்க்கும் உற்றோர்க்கும் ஆற்ற வேண்டிய கடமைகளையும், கல்வி கற்க வேண்டிய கடமைகளையும் செவ்வனே செய்ய வேண்டும் இன்றைய போட்டிமிக்க உலகில் ஒரு நொடி பொழுதையும் நாம் வீணாக்கக் கூடாது. காலத்தில்உழைத்தால் தான் அதன் பயனை அடைய முடியும்.” அழுது புரண்டாலும் அணைதாண்டிய வெள்ளம் மீண்டுவராது” என்ற பழமொழியைப் போல தவறவிடப்பட்ட காலமும் மீண்டும் வராது. இதனை மனதிற்கொண்டு காலத்தைப் பயன்படுத்த வேண்டும்.ஒவ்வொரு நாட்டிலும் சாதனையாளராகத் திகழ்ந்தவர்களெல்லாம் காலத்தை சிறப்பாகப் பயன்படுத்தியவர்களே. நம் முன்னால் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் குறித்த காலத்தில் வேலையைச் வயெ்து முடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார்அதனால் தான் அவரால் இந்தியாவை குடியரசு நாடாக மாற்ற இயன்றது. பொழுதுப்போக்கு என்ற பெயரில்அருமையான காலத்தை தேவையற்ற காரியங்களில் வீணாக்கக் கூடாது.  வெறுமனே அரட்டையடித்துக் கொண்டிருத்தல் , உறங்குதல், சூதாடுதல், தொலைக்காட்சி கண்டுகளித்தல் போன்றவைகளில் ஈடுப்படக்கூடாது. நல்ல நுால்களை கற்றோ, ஏதேனும் நல்ல பயனுள்ள வேலைகளை செய்தோ காலத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும்...

                                                        நன்றி.......

No comments:

Post a Comment