Thursday, 19 February 2015

செய்தி

பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய தேர்வாணையர் நியமனம்

சேலம்.பிப்.20,
பெரியார் பல்கலைக்கழக புதிய தேர்வாணையராக பேராசிரியர் எஸ்.லீலா புதன்கிழமை பொறுப்பேற்றார்.
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வாணையராக இருந்த பேராசிரியர் பிரின்ஸ் தனராஜ் கடந்த 2013-ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தேர்வாணையராக பணியிட மாறுதல் பெற்றுச் சென்றார். இதனையடுத்து, பெரியார் பல்கலைக்கழகத் தேர்வாணையர்களாக பேராசிரியர்கள் ஏ.இளங்கோவன், ஏ.முத்துசாமி ஆகியோர் தாற்காலிக பொறுப்பில் இருந்தனர்.
இதனிடையே, பெரியார் பல்கலைக்கழகத் தேர்வாணையர் காலிப் பணியிடத்தை நிரப்பும் பணி நடைபெற்றது. இதில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.லீலா புதிய தேர்வாணையராக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தேர்வாணையர் பேராசிரியர் எஸ்.லீலா (50) புதன்கிழமை தேர்வாணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு, துணைவேந்தர் சி.சுவாமிநாதன், பதிவாளர் கே.அங்கமுத்து, பல்கலைக்கழக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


No comments:

Post a Comment