Friday, 6 February 2015

விமர்சனம்

தமிழகம் வலை
தமிழகம் வலை தமிழக ஊடக நிறுவனத்தின் இணையதளமாகும்.....
       தொழில்நுட்பங்கள் அதிகமாக வளர்ந்து வரும் நிலையில் அதிகமாக ஆங்கில இணையதளங்கள் பெருமளவில் பெருகிவருகிறது...இந்நிலையில் தமிழைப் பாதுகாக்கவும், மக்களிடையே தமிழை வளர்க்கவும் பல தமிழ் இணையதளங்களை உருவாக்கிவருகின்றனர்....
            பல தமிழ் இணையதளங்களில் ஒன்றுதான் நாம் பார்க்கும் தமிழகம் வலை. தமிழகம் வலை தமிழை பாதுகாக்கவும், பயன்படுத்தவும் உலகத்தமிழர்களை ஒர் இயக்கமாக ஒருங்கிணைக்கவும், தமிழர்களின் குமுக, பெருளியல் வாழ்க்கை, கல்வெட்டுகள் மதல் வரைத“ தொடரும் தமிழின் ஓட்டத்தின், இணையதளத்தில் தமிழின்மேம்பாட்டிற்கும், உலக அளவிலுள்ள தமிழ் இணையங்களின்  பாலமாகத் திகழவும் இத்தளம் பயன்படுகிறது..
               இத்தளம் அறிவியல் விழிப்புணர்வு, சூழியியல் வேளாண்மை, தமிழ் மருத்துவம், மாந்த உரிமைகள், கல்வி, பொழுதுபோக்கு , தமிழின் தொன்மையான கலை இலக்கியங்களை உலக அளவில் திரட்டி நமக்காக கொடுக்கிறது.  தமிழ் சிற்றிதழ்களை மையப்படுத்தி தகவல் செறிவுடனும், அழகிய வடிவமைப்புடனும், காலந்தவறாது இற்றைப்படுத்தப்பட்டும் இணைய இதழ் தமிழகம் ஆகும்...
                  இந்த இதழ் தமிழ் உணர்வாளரரும், புலமையாளரும், சிற்றிதழ் சேகரிப்பாளருமான பொள்ளாச்சி நசனால் வெளியிடப்படுகிறது. இத்தளத்தின் மூலம் தமிழ் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. இன்றும் தமிழ் இவ்வுலகில் வளம் வந்துக் கொண்டிருக்கிறது என்னறால் அது இது போன்ற வலை தளங்கள் மூலமாகதான் என்று உருதிப்படுத்துகிறேன....



                                                           நன்றி...........



           

No comments:

Post a Comment