இணையதளத்தில் எழுதுபவர்களால் தமிழ் சீரழிக்கப்படுவதாக தமிழ்
ஆர்வலர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.இன்றைய நவீன உலகில் இணையதளம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டது.எதில் எந்த சந்தேகம் வந்தாலும் உடனடியாக எல்லோரும் இணையதளத்தையேநாடுகின்றனர்.தொடக்க காலத்தில் இணையத்தில் ஆங்கிலம் மட்டுமே இருந்தது. தமிழ் உள்படபிற மொழிகளை இணையத்தில் காண்பது அரிதாகவே இருந்தது. இப்போது தமிழ் உள்படஎந்த மொழியிலும் எழுதுவதற்கும், படிப்பதற்கும் புதிது புதிதாகமென்பொருள்கள் வந்து கொண்டிருக்கின்றன.இணையதள தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவும் தமிழில் வரத் தொடங்கியுள்ளது.அதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் கூட இணையம் மூலம் தேவையான தகவல்களைஅறிந்து கொள்ள முடிகிறது. தமிழில் ஏராளமான இணையதளங்கள் உள்ளன. தினமும்பல தளங்கள் தமிழில் வந்து கொண்டிருக்கின்றன. அரசுத் துறைகள்,நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மட்டுமல்லாது பல தனிநபர்களும் தங்களை இணையதளம் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.சிற்றிதழ்கள் மூலம் தங்களை மெல்ல மெல்ல எழுத்தாளர்களாக வளர்த்துக்கொண்டவர்கள் இன்று இணையதளம் மூலம் வாசகர்களை வலைவீசி பிடித்துவருகின்றனர். எஸ். இராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா,மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் இணையதளங்கள் பிரபலமாக உள்ளன.இணையத்தில் தமிழ் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதில் எழுதுபவர்களால் தமிழ்சீரழிக்கப்படுகிறது என்று பெரும்பாலானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இணையத்தில் ஒரு தகவலைப் பெற விரும்பினால் அனைவரும் கூகுள் தேடு பொறியைநாடுகின்றனர். அதன் மூலம் தேவையான தகவல்களை பெறுகின்றனர்.ஆனால், கூகுள் தேடு-பொறியில் ஏதாவது தமிழ் எழுத்தை தட்டினால் அதுபட்டியலிடும் செய்திகள் 90 சதவீதம் ஆபாசம் நிறைந்தவைகளாக உள்ளன.அம்மா - மகன், அப்பா - மகள் போன்ற வார்த்தைகளை இட்டு தேடினால் கூடஆபாசக் கதைகளே வருகின்றன. அந்த அளவுக்கு இணையத்தில் தமிழ் ஆபாசக் கதைகள்நிறைந்துள்ளன என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் ஆபாசக் கதைகள் இருந்தாலும் தமிழ் அளவுக்குஇல்லை. அப்பா - மகள் போன்ற தலைப்புகளில் கூட ஆபாசக் கதைகள் இருப்பதால்அதனைத் தடுக்கவும் வாய்ப்பில்லை. இது போன்ற கதைகளை படிப்பதால் இளைஞர்கள்குறிப்பாக மாணவர்கள் ஒருவித மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்என்கிறார்கள் டாக்டர்கள்.எனவே இது போன்ற விஷயங்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணிக்கவேண்டும். அதுபோல தமிழில் 'பிளாக்' எழுதுபவர்கள் தனி மனிததாக்குதல்களிலும், மதங்களை இழிவுப்படுத்தி எழுதியும் வருகின்றன. பலநேரங்களில் இவர்கள் எழுத்துக்கள் மூலம் மோதி வருகின்றனர். இதனால் சமூகஅமைதி குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.எனவே சைபர் கிரைம் போலீசார்இணையத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின்எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி.....................
No comments:
Post a Comment