எமது சூரிய குடும்பத்திலுள்ள கோள்களில் (கிரகங்களில்) ஒன்றாக புளூட்டோ மீண்டும் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையடுதது சர்வதேச வானியலாளர்கள் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு புளூட்டோவை கோள் அந்தஸ்திலிருந்து நீக்கியது.
சூரியனை சுற்றி வருதல், ஏறத்தாழ கோள வடிவமாக இருத்தல், சூரியனை சுற்றிவரும் தனது பாதையிலுள்ள ஏனைய பொருட்களை அப்புறப்படுத்திக்கொள்ளும் தன்மை ஆகியன கிரகங்களுக்கு இருக்க வேண்டும் என சர்வதேச வானியலாளர்கள் ஒன்றியம் கூறியது.
அதன்பின், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ரியூன் ஆகிய 8 கோள்களே சூரிய குடும்பத்தில் இருப்பதாக வானியலாளர்களால் உத்தியோகபூர்வமாகக் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவாதமொன்றின் பின் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, புளூட்டோவை மீண்டும் கிரகமாக அங்கீகரிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
கிரங்கள் தொடர்பான தற்போதைய வரைவிலக்கணம் போதுமானதல்ல என ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் திமேத்தர் சசேலோவ் கூறியுள்ளார்.
இதையடுத்து மீண்டும் புளூட்டோ ஒரு கிரகமாக அங்கீகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பூமியின் சந்திரனை விட புளூட்டோ சிறியதாகும். அதன் ஈர்ப்பு சக்தி குறைவாகையால் தனது பாதையிலுள்ள பல விண் கற்களை அகற்றிக்கொள்ள அதனால் முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment