Thursday, 29 January 2015

government review

                                                             அம்மா குடிநீர் திட்டம்

       அம்மா குடிநீர் என்பது தமிழ்நாட்டின் அரசுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் ரூ. 10-க்கு   லிட்டர் மினரல் வாட்டர் ( அம்மா குடிநீர் ) விற்பனை செய்யும் திட்டம்  கா.ந. அண்ணாதுரை பிறந்த தினமான செப்டம்பர் 15 ந் தேதி தொடங்கப்பட்டது.

          அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அரசு போக்குவரத்துக்  கழகத்தின்  சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 10.5 கோடியில்  அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குடிநீர் உற்பத்தி நிலையம், 2.47 ஏக்கர் பரப்பில் அரசு விரைவுப்  போக்குவரத்துக்  கழகத்தின்  சார்பில் சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் கும்மிடிபூண்டியில்  அம்மைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும்.

             இந்த குடிநீர் விற்பனைத் திட்டம் மாநிலத்தில் மற்ற போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மேலும்  9 இடங்களில் விரிவுப்படுத்தப்படும்  மற்றும் 30 ஊழியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளை அரசு அளித்துவருகிறது .

              ரயில்வே நிர்வாகம் விற்பனை செய்யும் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 15, தனியார் நிறுவனங்கள் ரூ. 20-க்கு ஒரு லிட்டர் விற்பனை செய்கின்றனர். ஆனால் அம்மா குடிநீர் ரூ. 10-க்கு கிடைப்பதால் பயணிகள் குறைந்த செலவில் தரமான தண்ணீரை குடிக்க முடியும் என்று மக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்........



                          இப்படிக்கு உங்கள் தோழி பிருந்தா ..........
             
     
                                                  நன்றி ..............


              

1 comment: