ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீ திவ்யா ஐதரபாத்தில் பிறந்தார். தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார்.

ஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். கிட்டத்தட்ட பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்தார். இது வெற்றி பெற்றது.

பின் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[6] இப்போழுது இவர் "பென்சில்" எனும் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து கொண்டுள்ளார். மேலும் எத்தி,கக்கி சட்டை மற்றும் வெள்ளைக்காரா துரை எனும் தமிழ் படங்களில் நடித்துகொண்டு உள்ளார்.
திரைப்பட வரலாறு
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் | |
|---|---|---|---|---|---|
| 2000 | ஹனுமான் ஜங்ஷன் | தெலுங்கு | குழந்தை நட்சத்திரம் | ||
| 2000 | யுவராஜு | தெலுங்கு | குழந்தை நட்சத்திரம் | ||
| 2003 | வீடே | தெலுங்கு | குழந்தை நட்சத்திரம் | ||
| 2010 | மனசார | அஞ்சலி | தெலுங்கு | ||
| 2012 | பஸ் ஸ்டாப் | ஷைலஜா | தெலுங்கு | ||
| 2013 | மல்லெல தீரம் லோ சிரிமல்லெ புவ்வு | லட்சுமி | தெலுங்கு | ||
| 2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் | லதா பாண்டி | தமிழ் | ||
| 2014 | ஜீவா | ஜென்னி | தமிழ் | ||
| 2015 | பென்சில் | தமிழ் | படப்பிடிப்பில் | ||
| 2015 | கக்கி சட்டை | தமிழ் | படப்பிடிப்பில் | ||
| 2015 | ஏத்தி | தமிழ் | படப்பிடிப்பில் | ||
| 2015 | வெள்ளைக்காரா துரை | தமிழ் | படப்பிடிப்பில் |
No comments:
Post a Comment