Wednesday, 28 January 2015

review

         விஜய் டிவி புதுமையான நிகழ்ச்சிகளின் முன்னோடி என்றே சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு இன்றைய பல தொலைகாட்சி நிகழ்ச்சிகள் முதன் முதலில் விஜய் டிவி ஒளிப்பரப்பியதகவே இருந்து வருகிறது. அந்த வரிசையில் ஒரு தொடர் சரவணன் மீனாட்சி..
         
இளைய தலைமுரைனருக்கு காதல் பிடித்தமானதொரு விசயம் தானே இந்த தொடரில் அதற்க்கு தான் முக்கியம் கொடுக்கபடுகிறது. காலங்காலமாக சீரியல் என்றாலே அழுகை எனும் விதியை மாற்றி இருக்கிறது இந்த தொடர்  அதற்காக செண்டிமெண்ட் இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது . தேவைக்கு ஏற்ப சரியாக இருந்து வருகிறது .
     கல்லூரி  மாணவ மாணவிகள்  இதற்க்கு முன்னணி  ரசிகர்களாக இருந்துவருகின்றனர். இப்போது சரவணன் மீனாட்சியில் வரும் ஏலேலோ .. அறிமுக பாடல் ரிங்க்டோனாக ஒலித்துவருகிறது.  இனி வரும் எபிசோடுகளில் எல்லா சீரியல் மாதிரி ஓவரா அழுகை காட்சி  இல்லாமல் இருந்தா சூப்பர்  தாங்க.........


+

No comments:

Post a Comment