Saturday, 21 February 2015

child

குழந்தை திருமணம்
 
   இந்தியா முழுவதும் அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை பால்ய விவாகம் எனப்படும் குழந்தை திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டப்படி குற்றம் என அறிவித்தபிறகும், அதையும் மீறி ரகசியமாக நடக்கிறது. தமிழகத்தில் 25 சதவீதம் பெண்களுக்கு 18 வயது முடிவதற்கு முன்பே திருமணம் நடந்து விடுவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகம். கிருஷ்ணகிரியில் 45 சதவீதம் பெண்களுக்கும் சேலம், தர்மபுரியில் 43 சதவீதம் பேருக்கும் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். உறவினர்கள் மூலம் தகவல் தெரிந்து, திருமணத்தை நிறுத்தி விடுகிறோம். கடந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 70 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதற்கு சிறு வயதிலேயே திருமணம் முடித்து வைப்பதே சிறந்த வழி என்று மக்கள் கருதுகின்றனர். பல சிறப்பு அம்சங்களைத் தன்கைத்தே கொண்டிருக்கும் பாரத நாடு உலகளவில் பல்வேறு துறைகளில் முதன்மையான இடத்தை வேன்றேடுக்காத்தர்க்கு காரணம் மக்களின் மூடனம்பிக்கைகளும் , அவர்கள் பின்பற்றும் முறையற்ற பழக்க வழக்க்ன்கலுமே இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பால்ய விவாகம் என்று அழைக்கப்படும் குழைந்தை திருமணம் அது போன்று இயற்கைக்கும், சட்டத்திற்கும் முரணான ஓன்று எனலாம்.
           சமுதயத்தின் சாபகேடான  பால்ய விவாகங்களை வேரறுக்க குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் 2006- ஐ மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் .....

                                                      நன்றி .....................
child marriage in tamilnadu க்கான பட முடிவு
              


Friday, 20 February 2015

photo news

   

                                            பெரியார் பல்கலைகழகத்தில்   மன நல ஆரோக்கிய                                                      தினம் கொண்டடப்பட்டபோது எடுத்தபடம் ..... இதில்                                                        துணைவேந்தர் டாக்டர் சுவாமிநாதன், பதிவாளர்                                                               அங்கமுத்து  மற்றும் மாணவர்கள் பலர்                                                                                 கலந்துகொண்டனர் .....              

sirpam


சிற்பங்கள் 

















Thursday, 19 February 2015

செய்தி


புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

கருப்பூர், டிச.17–

    பெரியார் பல்கலைக்கழக உயிர் வேதியியல் துறை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியைத் தொடங்கி வைத்து துணைவேந்தர் சி.சுவாமிநாதன் பேசியதாவது:–
    உலக அளவில் புற்றுநோய் பெரும் சவாலாக உள்ள நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 1.85 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலை நீடித்தால் 2030–ல் இது பன்மடங்கு அதிகரிக்கும் என ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே, இளம் ஆராய்ச்சியாளர்களாகிய மாணவ–மாணவியர் புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடம் உருவாக்க வேண்டும். மேலும், புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அதற்கான மருந்தினை கண்டறிய வேண்டும். 
     இவ்வாறு அவர் பேசினார்.
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கே.அங்கமுத்து, உயிர் வேதியியல் துறைத் தலைவர் ஜி.சுதா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வை.மஞ்சு, உதவி பேராசிரியர்கள் எம்.சுரியவதனா, எம்.கிருஷ்ணவேணி மற்றும் மாணவ–மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெரியார் பல்கலைக்கழகம்...


பெரியார் பல்கலைக்கழகம்
சேலம்.



பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார்பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய 
ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது.
வரலாறு

பெரியார் பல்கலைகழகம் தமிழக அரசால் 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்பொழுது வர்த்தகம், புவி அமைப்பியல் மற்றும் கணிதம் ஆகிய மூன்று துறைகள் தொடங்கப்பட்டன. முதல் துணை வேந்தராக திரு. டி ஜெயக்குமார் அவர்களும், முதல் பதிவாளராக திரு.வேலுசாமி நல்லியன் அவர்களும் இருந்தனர்.

நிருவாகம்

சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் 12 (பி) 2007- ல் என் சி இன் B + தர அங்கீகாரம் பெற்றது.

பாட பிரிவுகள்
எம்.. பொருளாதாரம்
எம்.. ஆங்கிலம்
எம்.. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பாடல்
எம்.. தமிழ்
எம்.. மனித சமுதாயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வு மற்றும் தத்துவியல்
எம்.பி. மேலாண்மை ஆய்வுகள் மற்றும் தத்துவியல்
எம்.சி .
எம்.காம். வர்த்தகம் மற்றும் தத்துவியல்
எம்.எட். கல்வி
எம்.எஸ்.சி உயிர் வேதியியல்
எம்.எஸ்.சி உயிரி தொழினுட்பம்
எம்.எஸ்.சி வேதியியல்
எம்.எஸ்.சி கணினியியல்
எம்.எஸ்.சி உணவு அறிவியல்
எம்.எஸ்.சி சுற்றுச்சூழல் அறிவியல்
எம்.எஸ்.சி பயன்பாட்டு புவி அமைப்பியல்
எம்.எஸ்.சி கணிதம்
எம்.எஸ்.சி நுண்ணுயிரியில்
எம்.எஸ்.சி இயற்பியல்
எம்.எஸ்.சி உளவியல்
எம்.எல்..எஸ்
தொடர்புக்கு

பெரியார் பல்கலைக்கழகம் பெரியார் பல்கலை நகர் சேலம் - 636 011.

இணைப்பு கல்லூரிகள்:

71
க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இதன் இணைவுப்பெற்றுள்ளன.

பெரியார் பல்கலைக்கழக நிர்வாக கல்லூரிகள்:

1.பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூர் அணை, சேலம் மாவட்டம் - 636 401.

2.பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம் தர்மபுரி மாவட்டம் - 636 806.

3.கலை மற்றும் அறிவியல், அரூர், தர்மபுரி மாவட்டம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரி.
4.கலை மற்றும் அறிவியல், பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி மாவட்டம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரி.


                                                        நன்றி..............